ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒரு பாடல் வீடியோவை இயக்கியுள்ளார். இது தொடர்பான அப்டேட்களை ஐஸ்வர்யா தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில், அப்பாடல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா, படப்பிடிப்பு மற்றும் ரிலீசுக்கு நடுவே, குணமடைந்து வீடு திரும்பி, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து பாடல் எழுதுவதில் ஈடுபட்டார்.
தமிழில் ‘பயணி’ என்றும், தெலுங்கில் ‘சஞ்சாரி’ என்றும், மலையாளத்தில் ‘யாத்ரக்காரன்’ என்றும் இந்தப் பாடலுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலை நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து ரஜினி கூறுகையில், என் மகள் 9 ஆண்டுகளுக்கு பின் இயக்கியுள்ள பயணி ஆல்பத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. அவர் எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன். கடவுள் ஆசீர்வதிப்பார். லவ் யூ என கூறியுள்ளார். முன்னதாக துல்கர் சல்மான், எஸ்.ஜே.சூர்யா, சிரஞ்சீவி, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்களும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மறுபிரவேசத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
By: Hari