ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஆக்சன் ஹீரோயினாக மாறியுள்ளார் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா ஒரு நடிகையாக, மாடலாக மற்றும் பாடகியாக தனது சினிமா வாழ்க்கையில் தனக்கென்று ஒரு புதிய தடம் பதித்தவர். இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்‘ மற்றும் சுந்தர் சி யின் ‘அரண்மனை 3‘ படத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ், ஜான்மேக்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் கா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஆண்ட்ரியா உடன் ரெட், வேட்டைக்காரன் படங்களில் நடித்த சலீம் கவுஸ், கமலேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ளார். சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு – எலிசா.
அந்தமான், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. 2018ம் ஆண்டு துவங்கிய இந்த படம் 4 ஆண்டுகள் படமாக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டில் ரிலீசாக உள்ளது.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்தில் பாடல்கள் இல்லை என்றும், ஆண்ட்ரியா படம் முழுவதும் ஒரே ஒரு உடையில் மட்டுமே காணப்படுவார் என்றும் இயக்குனர் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Kaa – Official Trailer | Andrea Jeremiah | Salim Ghouse | Marimuthu | Nanjil | Sundar C Babu