ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவன் ஆகியோர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர்.
இந்த படம் மார்ச் 25ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையிடப்படவுள்ளது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பட குழுவினர், துபாயிலுள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்திற்கு செல்ல உள்ளனர். இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒலிவியா மோரிஸ் நடித்துள்ளார். இவர் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இதுவரை பங்கேற்கவில்லை. ஆனால் துபாயில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.