ஆர் மாதவனின் ‘ரக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்‘ ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியும், விண்வெளி பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மாதவன் இப்படத்தை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது மாதவனுக்கு, இயக்குநராக முதல் திரைப்படம். சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்(ஹிந்தி) மற்றும் சூர்யா(தமிழ்) கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.
ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் 27வது இன்வெஸ்ட்மென்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இத்திரைப்படம் இந்தியாவில் UFO Moviez மற்றும் AGS சினிமாஸ் ஆகியவற்றால் விநியோகிக்கப்படுகிறது. மேலும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தால் சர்வதேச அளவில் விநியோகிக்கப்படும்.
ராக்கெட்ரியில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார். நம்பியின் மனைவியாக சிம்ரன் நடிக்கிறார். சாம்.C.S இசையமைத்துள்ளார். சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மாதவனின் மிகப் பெரிய திரைப்படம் என்று சொல்லப்பட்டாலும், மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் பெரிய திரைக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் மாதவனை இதுவரை பார்த்திராத அவதாரத்தில் காணலாம். பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நம்பி கதாபாத்திரதிற்காக மாதவன் தனது உடலமைப்பில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றத்தின் வீடியோவை வெளியிட்ட அவர், “கதாப்பாத்திரத்தில் நடிக்க 2 ஆண்டுகள் ஆகும் மற்றும் தோற்றத்தைப் பெற 14 மணிநேரம் நாற்காலியில்” என்று தலைப்பிட்டார்.
By: Hari