போனிகபூர் தயாரிப்பில் RJ பாலாஜி நடிக்கும் ரீமேக் படத்திற்கு ‘வீட்ல விசேஷம்‘ என பெயரிடப்பட்டுள்ளது.
ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர். இவருக்கு பல ரசிகர்கள் உண்டு.
காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ ( ‘Badhaai Ho’) படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பது மட்டுமல்ல, இந்த திரைப்படத்தின் இயக்குனரும் இவர்தான். இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம். தேசியவிருதையும் வென்றுள்ளது.
இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் யோகி பாபு ஆர்.ஜே.பாலாஜியுடன் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படம் ஜூன் 17,2022 அன்று வெளியாக உள்ளது. ஊர்வசிக்கு வளைகாப்பு நடத்துவது போன்ற புகைப்படத்துடன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
By: Hari